காலையில் FM இல் ஏதேனும் பழைய பாடல்கள் போடுகிறர்களா என்று தேடிக் கொண்டிருந்த போது நம் மக்கள் வந்துட்டான்யா வந்துட்டான் என்று நகர்ந்ததைப் பார்த்ததும் நம் 'அறிவு GV' வந்து விட்டார் என்பதைத் தெரிந்து கொண்டேன். 8 சான்னெல் இருக்கு ஆனால் எல்லாமே FM தான் போடறா. FM -க்குப் பதில் CM - ஆக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நான் கூட ஒரு கடிதம் எழுதிப் போட்டிருக்கிறேன் என்றார்.
உங்களுக்குப் பசி பொறுக்காது என்று தெரியும். ஆனால் அவருக்குப் பதில் இவர் வந்து [அல்லது போய்] என்ன செய்யக் கூடும் என்று கேட்க. உனக்கு எல்லாமே அரசியல் தான்! நான் சொன்னது Film Music & Classical Music என்றாரே பார்க்கலாம்!