HUMOUR CLUB INTERNATIONAL
Triplicane Chapter
3A Krishnamandhir Apartments
No.27 Thiruvenkadam Road
R.A. PURAM, CHENNAI 600 028
044-2461 4820, 9444354801
இனிய அங்கத்தினர்களே, நண்பர்களே, நலன்விரும்பிகளே!
"எங்கள் குடும்பம் ரொம்ப பெரிசு
புள்ள குட்டிகளும் பத்து தினுசு
அவை அத்தனையும் புத்தம் புதிசு
நல்ல முத்து போல் வெள்ளை மனசு"
இந்த பாட்டுதான் எங்க அமைப்புக்கு பொருத்தமான பட்டு -
ஏதோ எங்களுக்காகவே எழுதிய பாட்டு போலவே இருக்கும்
அப்படி ஒரு அருமையான - எல்லாவிதத்திலும் மிக உயர்ந்த,
பண்பான, இனிமையான, பரந்த உள்ளம் படைத்தவர்கள் -
இரண்டாயிரம் அங்கத்தினர்கள் ஒன்றாக கூடும் கூட்டம்!
வரும் ஜூலை 22- ஆம் நாள் - ஞாயிறு - மாலை சரியாக நான்கு மணிக்கு
சென்னை - தேனாம்பேட்டை - காமராஜ் அரங்கத்தில் (A/c)
எங்களது இருபத்தி ஒன்பதாம் ஆண்டு விழா -
தமிழ்நாட்டின் மிகச்சிறந்த முன்னணி பேச்சாளர்கள் ஐந்து பேர்கள்
கலந்துகொண்டு ஒரு நகைச்சுவை விருந்து அளிக்கபோகிறார்கள்!
நல்ல பூ வேலைப்பாடுகள் நிறைந்த - இன்முகம் காட்டும் வரவேற்பு ஏற்பாடுகள்!
இனிய நாதஸ்வரம்! - மங்கையர்களுக்கான அழகான வளையல்கள்!
மனம்நிறைந்த மல்லிகைபூக்கள்! - உள்ளே வரும் ஒவ்வொருவருக்கும்
கை நிறைய பரிசுப்பொருள்கள் நிறைந்த அழகான அன்பளிப்பு பை ஒன்று!
மிக நேர்த்தியான வேலைப்பாடு நிறைந்த வண்ணமிகு உள்ள்மேடை அலங்காரம்!
படித்தவர்களும் - பன்பானவர்களும் - தமிழ்நாட்டின் மிகச்சிறந்த
முன்னணி பேச்சாளர்களும் நிறைந்த பெருமைக்குரிய சபை!
சரியான நேரத்தில் தொடங்கி - சரியான நேரத்தில் முடியும் விழா ஏற்பாடுகள்!
நான்கு மணி நேரம் - உங்கள் கவலைகளை - சோகங்களை - மறந்து -
மனம் விட்டு சிரிக்கவைத்து - மகிழ்ச்சி அலைகளை மலையாக உங்களுக்கு
அளிக்கவிருக்கும் ஒரு அருமையான பொன் மாலைபொழுது!
உங்கள் குறிப்பேட்டில் - ஜூலை 22-ஆம் தேதி மாலை நான்கு மணி முதல் எட்டு மணி வரை
உங்கள் மன மகிழ்ச்சிக்கான நேரமாக - இன்றே குறித்து வையுங்கள்!
இந்த நிகழ்ச்சி பற்றி உங்கள் உறவினர்களுக்கும் - நண்பர்களுக்கும் எடுத்துசொல்லி
இந்த விழாவில் கலந்துகொண்டு மகிழ சொல்லுங்கள்
சந்தா விவரங்கள்:
ஆண்டு சந்தா: ரூபாய் இருநூறு - ஆயுள் சந்தா: ரூபாய் இரண்டாயிரம் மட்டுமே!
மேலும் விவரங்களுக்கு எங்கள் பொருளாளர் திரு கண்ணன் அவர்களை உடனே
தொடர்பு கொள்ளுங்கள்: செல் நம்பர்: 98415 32212
அன்புடன் நன்றி!
ஆர். சேகரன்
செயலாளர்
சர்வதேச நகைச்சுவையாளர் சங்கம்
திருவல்லிக்கேணி கிளை
சென்னை