இந்த சீசனுக்கு போணியாக, நேற்று (திங்கள்) வாணி மகாலில் விஜய் சிவா கச்சேரி கேட்டேன். முன் வரிசை இருக்கை தம்பி உபயம்.
பிரபலமான இந்த பாடகருக்கு பிற பலருக்கு வரும் கூட்டம் வராதது, அவருக்கு துரதிருஷ்டம் அல்ல. அவரது மிக உயரிய இசையைக் கேட்கத் தவறிய ரசிகருக்குதான் நஷ்டம்.
அவர் வடமொழியில் சுலோகம் பாடும் அழகே அழகு. சங்கராபரணம், வராளியில் மிகச் சிறந்த ஆலாபனைகள். உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தமிழ்ப்பாடல்கள் திருப்புகழ் என ஜமாய்த்து விட்டார்.
ஆசார சீலரான விஜய் சிவாவுக்கு அதே போல் சீலரான ஸ்ரீராம்குமார் வயலின். கணேஷ் மிருதங்கம் புருஷோத்தமன் கஞ்சிரா.
நூற்றுக்கு நூறு வாங்கிய அப்பழுக்கற்ற அருமையான கச்சேரி. கேட்காதவர்கள் வருந்தலாம். கேடடவர்கள் பாக்கியசாலிகள்