கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப்பார்! என்று பலர் சொல்லி கேட்டிருக்கிறோம். பொருத்தமான வரன் கிடைக்க பல நாள் அலைய வேண்டியிருக்கும் பலருக்கு. அவ்வாறு வரன் தேடும் பிராமின் சமூகத்தினருக்கு உதவும் விதமாக http://www.tamilbrahmins.com/அமைப்பு வரும் ஜனவரி 24 அன்று, மல்லேஸ்வரம் காஞ்சி சங்கர மடத்தில் ஒரு விவாஹ சங்கமம் (பெற்றோர்கள் சந்திப்பு) ஏற்பாடு செய்துள்ளனர். இதில் தமிழ் பிராமின் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு பிராமின் சமூகத்தினரும் கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்! கலை, கலாச்சாரம் மற்றும் பக்தியினை வளர்க்கும் விதமாக பிராமின் சமூகத்தினருக்கு ஒரு சிறந்த மேடையாக விளங்கும்http://www.tamilbrahmins.com/ , பக்தி பாடல்களும், கர்நாடக இசை பாடல்களும் கேட்க விரும்புவோருக்கு ஓர் வரப்ரசாதம்!
இந்நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்புவோர்,http://www.tamilbrahmins.com/ வலைதளத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர், விவாஹ சங்கமம் குறித்த விவரங்களை வலைதளத்தின் வலப்புறம் உள்ள இணைப்பு மூலம் எளிதில் அறியலாம்.
சேவை நோக்கோடு ஏற்பாடு செய்யப்படும் இந்த விவாஹ சங்கமம் நிகழ்ச்சி பற்றி தங்களது நண்பர்களுக்கு தெரிவித்து, அவர்களது இல்லங்களில் கெட்டி மேளம் ஒலிக்க அவசியம் உதவி செய்யுங்கள்!