ஒரு சக்தி வாய்ந்த நாடு எந்த காதில் பூ சுற்றினாலும் நாம் சந்தோஷமாக காதை காட்டுகின்றோம். சில எடுத்துக்காட்டுகள்!
-நிலா பயணம், நிலவில் மனிதன்! இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகின்றது இந்த சாதனை(?) நிகழ்ந்து.
Apollo 11, 12, 14, 15, 16,17....
அமெரிக்கா, தனக்கே உரிய பாணியில் Mega budget நிலா செட் அமைத்து அங்கே Neil Armstrong தனது பஞ்ச் டயலாக்கை (One small step for man...one giant leap for mankind) அடிக்க வைத்தது என்பது சிலரின் வாதம்.
அமெரிக்காவை தவிர வேறு எந்த நாடாலும் ஏன் மனிதனை நிலவுக்கு அனுப்ப முடியவில்லை? ஒரு வாரத்துல iPhone க்கு போட்டியா Hiphone வரல? Apollo போல இன்னொரு Cupola விண்கலத்தை செய்ய எத்தனை வருடங்கள் ஆக போகிறது?
இன்றும் எவராலும் எப்போதும் இதை மீண்டும் சாதிக்க முடியவில்லை? இன்றைய விஞ்ஞானம் 70's ஐ விட தாழ்வானதா?
நிலவில் காற்றே கிடையாது, ஆனால் அமெரிக்க கொடி காற்றில் அசைவது அந்த Moon Landing வீடியோ பதிவில் தெரிகின்றது என்று கூறி மிக சமீபத்தில் Whoopi Goldberg உம் இந்த Moon landing-ஒரு-Hoax பட்டியலில் சேர்ந்துள்ளார்.
-எனக்கு எப்பொழுது நினைத்தாலும் புன்முறுவலைத் தருவது UFO.
Unidentified Flying Objects. அமெரிக்காவில் மட்டும் அடிக்கடி இந்த UFO க்கள் காட்சி தரும்.
UFO Hunters என்று பணத்தை விரையமாக்க ஒரு குழு வேறு. அதை மையமாகக் கொண்டு நான்கு திரைப்படங்கள், நான்கு டி.வி தொடர்கள்.
-பற்பல Conspiracy Theories -- Old ஏற்பாடு படி ஒரு மனிதன், New ஏற்பாடு படி கடவுள்! அவருக்கு மனைவி மக்கள் இருந்தனர். அவர் பழரசம் குடித்த கோப்பை. அவர் ஒரு கறுப்பர்.அவர் தீர்ப்பு கூறும் போது எச்சி துப்பும் சொம்பு என்று என்ன கோமாளித்தனம் இது?
இந்த கோமாளித்தனங்கள் எதை சாதிக்க? நிஜமான சாதனைகள் நிறைய செய்யும் போது இந்த தேவையற்ற Fairytale fantasies எதற்கு? இது போன்ற conspiracy எதாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
அன்புடன்
அருண்