Welcome to you: cute, smart, intelligent & eager member!*** We will give you a lot of useful links here!***
Friday, February 7, 2014
Thursday, February 6, 2014
எறும்பு - சில தகவல்கள்
எறும்புகளுக்கு மூன்று இணைப்புகளை உடைய 6 உறுதியான கால்கள். எனவே வேகமாக ஓடும்.
எறும்பின் அளவுக்கு அது ஓடும் வேகத்தோடு கணக்கிட்டால் அதே அளவில் மனிதன் ஓடினால் ஒரு பந்தயக் குதிரையின் வேகம் இருக்க வேண்டும். தன்னுடைய உடல் எடையைப் போல 20 மடங்கு அதிகமான எடையை எறும்புகளால் தூக்க முடியும்.
எறும்புகளுக்கு சாதாரணமாக ஆயுள் 45-60 நட்கள். ராணி எறும்புகள் 30 வருடங்கள் வரை கூட வாழும். (அட!)
எறும்புகளுக்கு பல சிறு கண்களைக் கொண்ட இரு பெரிய கண்கள். இரண்டு வயிறுகள். ஒன்று அதன் பசிக்கு. இன்னொன்று மற்ற எறும்புகளுக்கு பகிர்ந்து கொடுக்க.
இதன் ரத்தம் நிறமற்றது.
ஒரு குறிப்பிட்ட குழுமத்தில் (சமூகத்தில்) அல்லது குழுவில் உள்ள எறும்புகள் தமக்கிடையே செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வேதிப்பொருள்களைப் பயன்படுத்துகின்றன (chemical communication)
ராணி எறும்பு இடும் முட்டைகளைப் பாதுகாக்கும் வேலைக்கார எறும்புகள் மிகவும் சுத்தமானவை. எந்த அளவு என்றால் உதாரணத்துக்கு அந்தக் காலனியில் இருக்கும்/சேரும் குப்பைகளைக் கொண்டுபோய் அதற்கென்று இருக்கும் பகுதியில் போடும் இயல்புடையன.
ஒவ்வொரு எறும்புக் குழுவுக்கும் ஒவ்வொரு வாசனை உண்டு. இதை வைத்தே அன்னியர் உள்ளே வந்தால் அவை அவர்களை அறிகின்றன. ராணியை இழந்த எறும்புக் கூட்டம் சில மாதங்களே பிழைத்திருக்கும். வேலைக்கார எறும்புகளால் இனப் பெருக்கம் செய்ய முடியாது.
சிப்பாய் எறும்புகளும் உண்டு. ராணியைப் பாதுகாக்கவும், பக்கத்து எறும்புக் குழுக்களைத் தாக்கி ஆக்கிரமிக்கவும், அங்கிருக்கும் முட்டைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்து அடிமை எறும்புகளை உருவாக்கவும் செய்கின்றன.
சில எறும்புகள் நீந்தும். சில எறும்புகள் 24 மணி நேரத்துக்கும் மேலாக நீருக்கடியில் தாக்குப் பிடிக்கும். சில எறும்புகளுக்குக் கண்கள் கிடையாது. எறும்பு அடிக்கடித் தூங்கிவிடும் பழக்கமுடையது. எறும்பின் எதிரி மனிதன் அல்ல, எறும்பேதான்!
பூச்சி வகைகளிலேயே பெரிய அளவிலான மூளை எறும்புக்குத்தான்.
ஒட்டுண்ணிகளை அழிக்கும் ஒரு திரவத்தை (ஃபார்மிக் ஆசிட்) உமிழும் எறும்புகளைச் சில பறவைகள் தங்கள் சிறகில் ஏற்றிக் கொள்கின்றன. தங்கள் இறகுகளை ஒட்டுண்ணிகளிடமிருந்து இந்த வகையில் அவை பாதுகாத்துக் கொள்கின்றன.
நுரையீரல் இல்லாததால் உடம்பில் உள்ள சிறு துளைகள் வழியே ஆக்சிஜன் உள் செல்வதும், அதே துளைகள் வழியாகவே கார்பன் டை ஆக்சைட் வெளிவருவதும் நிகழ்கின்றன.
பெரு நாட்டில் மழைக்காடுகளில் வாழும் செஃபலோடிஸ் ஏட்ரியஸ் இனமே முதன் முதலில் கண்டறியப்பட்ட சறுக்கும் எறும்பாகும்.
ஏதோ ஒரு காரணத்தால் மரத்தில் இருந்து இவை கீழே விழ நேர்ந்தால் பல நூறு அடி கீழே போவதோடு நீரில் விழுந்து உயிர்விடவோ அல்லது வேறு விலங்குக்கு இரையாகவோ நேரிடலாம். இதைத் தவிர்க்கும் பொருட்டு இந்த எறும்புகள் கீழே விழ நேர்கையில் தங்கள் பார்வைத் திறனைப் பயன்படுத்தி (பிற எறும்புகளுக்குப் பார்வைத் திறன் குறைவென்பதாலேயே ஃபெரமோன்களைப் பயன்படுத்தி ஒன்றையொன்று பின் தொடர்கின்றன.) மரத்தின் தண்டுப் பகுதியைச் சரியாக வந்தடைகின்றன.
தான் வசிக்குமிடத்திலிருந்து 200 மீட்டர் - 655 அடி - இரை தேடிச் செல்லும் ஒருவகைப் பாலைவன எறும்புகள் எப்படி வழி தொலையாமல் மறுபடி இருப்பிடத்தை அடைகின்றன என்று இங்கு படித்தேன்.
தஞ்சை வேங்குராயன் குடிகாடு பகுதியில் உள்ள வீடுகளில் படையெடுக்கும் எறும்புகளால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்று வீடியோவுடன் செய்தி தினமலரின் இந்தப் பக்கத்தில்!
எறும்பைப்பற்றி ஒளவையார்.... !
- வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
- அன்னாய்! யானை, எறும்பு, ஈ முதலான அத்தனைக்கும் உளமகிழ்ந்து உணவளித்துக் காக்கும் அரன் அற்பனோ? எனக்குக் கல்வி புகட்டிய அவனுக்கு என்னைக் காக்கும் கடமை இல்லாமலா போய்விட்டது?
Subscribe to:
Posts (Atom)