ஆதார் அடையாள அட்டை ஒரு சிறப்பு பார்வை
ஆதார் இந்த பெயர் எவ்வளவு முறை உச்சரிக்கப்படுகிறதோ, அதைவிட அதிகமாக உள்ளது இது குறித்த சந்தேகங்கள், இந்தியா போன்ற நாடுகளில் ஒன்றுபட்ட அடையாள எண் என்கிற திட்டம் புதிது.
இதனால் மக்கள் மத்தியில் இது குறித்த கேள்விகள் ஏராளமாக உள்ளன, ஆதார் எண் குறித்த தகவல்களை உரிய அதிகாரிகளிடம் புதிய தலைமுறை கேட்டது.
இது தொடர்பாக அதிகாரிகள் அளித்த பதில்களின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை மேற்கொள்ளப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியோடு இந்த முறை தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
நமது பெயர் மற்றும் விவரங்களை தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டில் இடம் பெறச் செய்யும் முயற்சியின் இறுதி வடிவம் ஆதார் எண் என்கிற பிரத்யேக அடையாள எண் ஆகும்.
அளிக்கப்பட வேண்டிய விவரங்கள்
பெயர், குடும்பத்தலைவர் உடனான உறவு,பாலின வகை, பிறந்த தேதி, திருமண நிலை, கல்வித் தகுதி, தொழில், தந்தை, தாய், துணைவரின் முழுப்பெயர், பிறந்த இடம், நாடு, தற்போதைய முகவரி, தற்போதைய முகவரியில் வசித்து வரும் ஆண்டுகள், நிரந்தர வசிப்பிட முகவரி என மொத்தம் 14 கேள்விகளுக்கு பதில் தர வேண்டும்.
பயோமெட்ரிக் அடையாளம்
ஒவ்வொரு மனிதனின் பயோமெட்ரிக் அடையாளம் எனப்படும் பண்புகள் பதிவு செய்யப்படுகின்றன.
இதில் ஒவ்வொருவரின் புகைப்படம், கைவிரல் ரேகைகள், விழி திரையின் பதிவு ஆகியவை அடங்கும் மற்றவர்களைப் போலவே மாற்றுத் திறனாளிகளுக்கும் அடையாளங்கள் பதிவு செய்யப்படும், என்ன குறைபாடு உள்ளதோ அதுவும் பதிவேட்டில் இடம்பெறும்
ஆதார் எண் வழங்கப்படும் விதம்
அனைத்து தகவல்களும் இந்திய அரசின் பிரத்யேக அடையாள எண் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, தகவல்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தனிநபருக்கான பிரத்யேக எண் வழங்கப்படும்.
இந்த எண் குறித்த விபரம் அஞ்சல் வழியாகவோ அல்லது செல்பேசி மூலமாகவோ ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தப்படுத்தப்படும்.
தகவல் சேகரிப்பு முகாம்கள்
தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், கிராமம் என அனைத்து பகுதிகளிலும் ஆதார் எண் தகவல் சேகரிப்பு முகாம் நடைபெறுகிறது.
நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலமாக அறிவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிகளிலும் நடத்தப்படும் முகாம்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம்
தங்கள் பகுதி முகாம்களை தவறவிட்டோர், புதியதாக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், மாநகராட்சி மற்றும் மாவட்ட அளவில் அக்டோபர் மாதம் அமைக்கப்பட உள்ள நிரந்தர மையங்களுக்குச் சென்று தகவல்களை வழங்கலாம்.
தகவல்களில் திருத்தங்களையும் மேற்கொள்ளலாம்.
மேலும் ஆதார் எண் இருந்தால்தான் அனைத்து அரசு சலுகைகளையும் பெற முடியும் என்பன போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்கின்றனர் அதிகாரிகள்.
ஐந்து வயதுக்கு மேல் உள்ள அனைவரின் தகவல்களும் சேகரிக்கப்பட்டாலும் பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவருக்கே ஆதார் எண் வழங்கப்படும்.
Communications without intelligence is noise;
Intelligence without communications is irrelevant
The content of this post may be a repeat to you. If so, please ignore this copy.
Apologies for any inconvenience.
Ashok Leyland Dost
R.Ananthanarayanan
09940222619
4 comments:
சென்னை விலாசத்திலே ஏற்கெனவே வாங்கியாச்சு, ஆனாலும் அது செல்லாதுனு சொல்லிட்டாங்க! :( இங்கேயோ பதிவுக்குப் போறது பெரிய வேலையா இருக்கு. ஒரு நாளைக்குப் பத்துப் பேருக்குப் பண்ணினால் பெரிய விஷயம். யாருக்கும் எதுவும் தெரியலை. நாம் சொல்லிக் கொடுத்தாலும் ஏற்பதில்லை. :((
தொடர
ஆதார் அட்டை ஓரிடத்தில் வாங்கியது வேறோரிடத்தில் செல்லாது என்று கூறினார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது! எந்த அலுவலகத்தில் செல்லாது என்று கூறினார்கள்? புதிய இடத்தில் விலாச நிரூபணத்திற்கு அது ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறியிருப்பார்களோ? விவரம் வேண்டும் கீதா மேடம்.
ஆதார் அட்டை வாங்குகையில் நாங்க சென்னை அம்பத்தூரில் இருந்தோம். சுலபமாக வாங்கியாச்சு. அதன் பின்னர் ஏற்பட்ட சில, பல மாற்றங்களால் இங்கே ஶ்ரீரங்கம் வந்து செட்டில் ஆனோம். காஸ் கனெக்ஷனில் இருந்து எல்லாத்துக்கும் ரேஷன் கார்ட் இங்கே இருக்கணும்னு சொன்னாங்க. காஸ் கனெக்ஷனை ஒரு மாதிரியா ரேஷன் கார்ட் விலாச மாற்றத்துக்கு விண்ணப்பம் செய்திருப்பதைக் காட்டி வாங்கினோம். அப்புறமா ரேஷன் கார்டும் இங்கே வாங்கியாச்சு. ஆனால் ஆதார் அட்டை சென்னை விலாசத்தில் இருப்பதால் இங்கே உள்ள விலாசத்தில் மீண்டும் மக்கள் தொகைப் பதிவுக்கணக்கில் பதிந்து மறுபடியும் விண்ணப்பிக்கச் சொல்லிச் சொல்லிவிட்டார்கள். ஏற்கெனவே இருக்கும் ஆதார் அட்டைகளைக் காட்டியும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆதார் அட்டையை வைத்தே எரிவாயு இணைப்புக்கான மான்யப் பணம், "உங்கள் பணம் உங்கள் கையில்!" புதிய ரேஷன் கார்ட் போன்றவை தருவதால் இங்கே தான் வாங்கணுமாம். மீண்டும் புதிதாக எல்லாமும் கொடுக்கணுமாம். அதுக்காக அலைகிறார். :((
நண்பர் வெங்கட் நாகராஜ் போன்றவர்கள் ஒருமுறை வாங்கினால் போதும் என்கின்றனர். இது குறித்துத் தெளிவாகத் தெரிந்து சொன்னால் நன்றியுடன் இருப்போம். விலாசம் மாற்றம் மட்டும் செய்து கொடுப்பது எளிது. நானும் இணையத்தில் இது குறித்து நிறையத் தேடிப் பார்த்தாச்சு. ஒண்ணும் பலனில்லை. :((((
Post a Comment