கிராம்பு என்பது ஒரு பூவின் மொட்டு ஆகும். இந்த மரத்தின் மொட்டு, இலை, தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன.
என்ன சத்து?
கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன.
என்ன பலன்கள்?
கிராம்பு ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல் வலிகளைப் போக்குவதுடன் வயிற்றுப் பொருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணி. உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சூட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும்.
தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
சருமப் பிரச்னைகளுக்கு -
கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.
கராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது. நான்கு கிராம் கராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் வாந்திபேதி குணமடையும்.
சிறிது சமையல் உப்புடன் கராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கராம்பு மிகச் சிறந்தது. கராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் உள்ளிச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும். முப்பது மில்லி நீரில் ஆறு கராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.
உணவு வகைகளில் பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் வாசனை பொருட்களாக முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். அவை, உணவுக்கு வாசனை மட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தருபவை. அந்த வாசனைப் பொருட்களை, தற்போதும் சமையலில் பயன்படுத்தி வந்தாலும், அவற்றின் மருத்துவ குணங்கள் குறித்து பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பதில்லை. உணவில் பயன்படுத்தும் வாசனைப் பொருட்கள் குறித்து, இந்திய பயிர் பதன தொழில் நுட்ப கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:
பட்டை: செரிமானத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு, திசுக்களை பலப்படுத்தும் தன்மை வாய்ந்தது. தசை பிடிப்பு, மூட்டு வலி, மாதவிடாய் பிரச்னை ஆகியவற்றை தீர்க்கவும், பல்சொத்தை, ஈறுகளில் வலி, சிறுநீரக பிரச்னைகள் ஆகியவற்றை தவிர்க்கவும் உதவுகிறது.
அன்புடன் உங்கள்
அனந்தநாராயணன்
10 comments:
இந்த தளம் இன்று தான் தெரியும்...!
மிகவும் பயனுள்ள தகவல்கள்... நன்றி...
கிராம்பு எனக்கு மிகவும் பயன் அளித்தது.
இரண்டு நேரங்களில்.
அலர்ஜிக் இருமல் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் கஷ்டப்படுத்தும் பொழுது உடனடி கண்ட்ரோல் செய்வது கிராம்பு ஒன்று தான். அதை ஒன்று இரண்டு எடுத்து பற்களில் இடையே அடக்கிக் கொண்டு இருந்தால் இருமல் அடங்குகிறது.
பல் ஈறு நடுவில் மிகவும் தொந்தரவு செய்யும்பொழுது கிராம்பு மிகவும் உபயோகம். நான் அதிக கிராம்பு இருக்கும் டாபூர் சிகப்பு பேஸ்ட் உபயொகித்தபின் தான் பல் ஈறு தொந்தரவு பெரும் அளவுக்கு நீங்கியது.
நேரடியாக கிராம்பு தைலம் மிகவும் எரிச்சலை உண்டு பண்ணும். இது ஒரு கௌண்டர் இரிடண்ட். அந்த வகையில் காப்சிகம் போல் இதுவும் வலியை அடக்குகிறது.
சுப்பு தாத்தா.
www.Sury-healthiswealth.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
Thanks a lot. engal blog.
//சருமப் பிரச்னைகளுக்கு -
கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.
திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.
துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.//
இதெல்லாம் சரும நோயா எப்போ மாறினது????????????????????????????????????????? :)))))
பதிவைப் போடும் முன்னர் கொஞ்சம் சரி பார்த்திருக்கலாமோ?? வந்ததே திரும்பத் திரும்ப வந்திருக்கு! :)
ஆஹா, லட்டு சாப்பிடும்போது பார்த்தால் தூக்கி எறியும் கிராம்பில் இத்தனை மகத்துவங்களா? பிரமித்துப் போனேன்.
உப்புசம் என்றால் என்ன?
@அப்பாதுரை, வயிற்றில் வாயு சேர்ந்து கொண்டு, வயிறு வீங்கினாற்போல் உப்பிக் கொள்ளும். அதை உப்புசம் என்பார்கள். கிராம்பு, ஏலக்காய், பச்சைக்கற்பூரம் இவற்றோடு வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு கலந்து போட்டுக் கொண்டால் உடனடி நிவாரணம்! :))))
பலமான விருந்துக்குப் பின்னரும் வெற்றிலை, பாக்குப் போட்டுக் கொண்டாலே விருந்து ஜீரணம் ஆகும் என்பதும் அனுபவித்த உண்மை.
அதனால் தான் சிராத்தம் முடிந்ததும் சாப்பிட்ட பிராமணர்களுக்கு வெற்றிலை, பாக்கோடு, ஏலக்காய், கிராம்பு வைத்துப் போட்டுக்கொள்ளக் கொடுப்பது இன்றளவும் வழக்கத்தில் உள்ளது.
அனந்தநாராயணன் பகிர்ந்தவை அனைத்தும அருமை!
Post a Comment