Thursday, July 23, 2009

one side of a coin

ஒரு சக்தி வாய்ந்த நாடு எந்த காதில் பூ சுற்றினாலும் நாம் சந்தோஷமாக காதை காட்டுகின்றோம். சில எடுத்துக்காட்டுகள்!
-நிலா பயணம், நிலவில் மனிதன்! இன்றோடு நாற்பது வருடங்கள் ஆகின்றது இந்த சாதனை(?) நிகழ்ந்து.
Apollo 11, 12, 14, 15, 16,17....
அமெரிக்கா, தனக்கே உரிய பாணியில் Mega budget நிலா செட் அமைத்து அங்கே Neil Armstrong  தனது பஞ்ச் டயலாக்கை (One small step for man...one giant leap for mankind) அடிக்க வைத்தது என்பது சிலரின் வாதம்.
அமெரிக்காவை தவிர வேறு எந்த நாடாலும் ஏன் மனிதனை நிலவுக்கு அனுப்ப முடியவில்லை? ஒரு வாரத்துல iPhone க்கு போட்டியா Hiphone வரல? Apollo போல இன்னொரு Cupola விண்கலத்தை செய்ய எத்தனை வருடங்கள் ஆக போகிறது?
இன்றும் எவராலும் எப்போதும் இதை மீண்டும் சாதிக்க முடியவில்லை? இன்றைய விஞ்ஞானம் 70's ஐ விட தாழ்வானதா?
நிலவில் காற்றே கிடையாது, ஆனால் அமெரிக்க கொடி காற்றில் அசைவது அந்த Moon Landing வீடியோ பதிவில் தெரிகின்றது என்று கூறி மிக சமீபத்தில் Whoopi Goldberg உம் இந்த Moon landing-ஒரு-Hoax பட்டியலில் சேர்ந்துள்ளார்.
-எனக்கு எப்பொழுது நினைத்தாலும் புன்முறுவலைத் தருவது UFO.
Unidentified Flying Objects. அமெரிக்காவில் மட்டும் அடிக்கடி இந்த UFO க்கள் காட்சி தரும்.
UFO Hunters என்று பணத்தை விரையமாக்க ஒரு குழு வேறு. அதை மையமாகக்   கொண்டு நான்கு திரைப்படங்கள், நான்கு டி.வி தொடர்கள்.
-பற்பல Conspiracy Theories -- Old ஏற்பாடு படி ஒரு மனிதன், New ஏற்பாடு படி கடவுள்! அவருக்கு மனைவி மக்கள் இருந்தனர். அவர் பழரசம் குடித்த கோப்பை. அவர்  ஒரு கறுப்பர்.அவர் தீர்ப்பு கூறும் போது எச்சி துப்பும் சொம்பு  என்று என்ன கோமாளித்தனம் இது?
இந்த கோமாளித்தனங்கள் எதை சாதிக்க? நிஜமான சாதனைகள் நிறைய செய்யும் போது இந்த தேவையற்ற Fairytale fantasies எதற்கு? இது போன்ற conspiracy எதாவது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா?
அன்புடன்
அருண்

9 comments:

Anonymous said...

என்னை ஒரு புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது, இந்தப் பதிவு. நன்றி.

Anonymous said...

ஆடும் கொடி பற்றி நிறையக் கேள்விகள் கேட்கப் பட்டு, அடைக்கப் பட்ட காற்று திறந்து விடப் பட்டது என்றும் சொல்லப் பட்டது

ரஷ்யா அனுப்பினது எல்லாம் நிஜம் என்கிறீர்களா? இல்லை அதுவும் காதுல பூ கேஸ்தானா?

இப்பொழுதிருக்கும் இன்டர்நெட் இதர பிற தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத காலத்தில், விடியோ ரெக்கார்டிங் கூட சரியாக செய்ய முடியாத காலத்தில் நடந்த ஒரு நிகழ்வுக்கு இப்போது ஆதாரம் கேட்கிறீர்கள். சில சமயம் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதே ஒரு நல்ல ஆதாரமாகும்.

இப்பொழுதெல்லாம் நம் பிரத்தியேகத் தகவல்கள் எல்லாம் கூட விற்கப் படுகின்றன - அவற்றை வாங்குபவர்களும் இருக்கிறார்கள்.
யார் வேண்டுமானாலும் விண்கலங்கள் செய்யலாம். அவற்றைப் பறக்கவும் விடலாம். நம் சந்திரயான் போக வில்லையா? என்ன நமக்கு ஒரு 40 வருடங்கள் ஆகியிருக்கிறது அவ்வளவுதான். ஆனால் அதற்கு செலவு செய்யப் பணம்? அதுதான் அமெரிக்கர்களிடம் நிறைய இருப்பதாக நாம் நினைத்துக்கொண்டிருந்தோம் சென்ற அக்டோபர் வரை. iphone கு ஒரு e-phone என்பதெல்லாம் concept ஒன்றுதான். ஆனால் செய்யப்படும் இடம் பொருள் வசதி இவை எல்லாம் கொண்டு அடுத்தடுத்து வந்து நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. இரண்டிலுமே ஒரே ic இருக்கஏதுவுண்டு,

அவ்வப்பொழுது மனிதர்களின் முன்னேற்றம் எங்கிருக்கிறதோ அதற்குத் தக்கவாறு அவர்களின் கற்பனையின் தகவும் அதிகமாகிறது.
ஒருவர் இரண்டு வேலைகளை ஒரே சமயத்தில் செய்ய வேண்டுமென்றால் நான்கு கைகளுடனும் ஒன்றுக்கு மேற்பட்ட தலைகளுடனும் தெய்வமோ அல்லது சாத்தானோ சித்தரிக்கப் பட்டார்கள்.

இப்பொழுது தெய்வங்களுக்கு என்ன உருவம் கொடுப்பது என்பதில் ஏகப்பட்ட குளறுபடி. எதுவும் ஆடிட்டில் பாஸ் ஆகமாட்டேன் என்கிறது. ஆகையால் புது மாடல்கள்வெளிவரவில்லை.

Anonymous said...

நம் HAL துவக்கப்பட்ட புதிதில் புஷ்பக் என்றொரு பயிற்சி விமானம் தொடங்கி இன்றைய சூரியக்கிரன் வரை - பிறகு சுகாய்-௩௦ வரை நாம் முன்னேறியிருந்தாலும், பயணிகள் விமானத் தயாரிப்பில் முதல் அடி கூட வைக்கவில்லை. ஏன்? பாதுகாப்பு சம்பந்தமான விஷயங்களில் அந்நியர் சார்பு என்பதை விட,நமக்கு நாமே திட்டங்கள் மேல். செவ்வாயோ வியாழனோ நாம் சென்று கொடி நாட்டி விட்டால், இன்னும் கொஞ்சம் செலவு கம்மியாக முடியும் என்றால் நான் நீ என்று எல்லா நாடுகளும் போட்டி போடமாட்டார்களா?
இப்பொழுது கூட பெரிய மின் நிலையங்கள் அமைப்பது அவ்வளவு கடினம் இல்லை அதை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்வதுதான் அதைவிட செலவாகிற சமாசாரம். என்பதனால்தான் பெரிய ஆலைகளைவிட சிறிய மின் நிலையங்கள் அதிகம்நிறுவப்படுகின்றன.
1993 க்குப் பின் தான் நாம் அந்நியச் செலாவணி இருப்பில் சற்று முன்னேறியிருக்கிறோம். கணினி களுக்கும் இயக்க சீக்கிரம் கற்றுக்கொண்ட இளைய தலை முறைக்கும், இரண்டாயிரமாவது வருடத்துக்கும் நமது நன்றிகள்பல.

kg said...

More of this kind welcome!

அருண் said...

ரஷ்யாவால் Unmanned கலங்களை மட்டுமே அனுப்ப முடிந்தது அல்லவா?
ஆதாரம் காட்ட முடியாததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் கருதலாமே.
இந்தியா பற்றி சிந்தித்தால் அதுவே ஒரு பெரிய கதை ஆகிவிடுமே. இந்த தலைப்பு அமெரிக்காவின் பூசுத்தலைப் பற்றியே நான் சிந்தித்திருந்தேன். "One side of the Coin" என்ற பெயர் மாற்றமே இந்த புதிய சிந்தனைக்கு வழி செய்திருக்கிறது. இந்தியாவின் பின்தங்கிய விஞ்ஞான நிலை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன், சுவாரசியமாக இருக்கும்.

kg said...

படிக்க மக்கள் தயார் என்றால் எழுதுவதற்கு நானும் தயார். கஷ்டங்களுக்குத் தயாராகுங்கள்

Joe said...

UFO Hunters are people with too much time & money.

In America, you will get some monthly allowance, if you are unemployed, which may be sufficient to buy basic items to run a month.

If it's really their passion, they may do it over the weekends and get some real work done during the weekdays! They are not going to change, they can't read this blog anyway ;-)

Kasu Sobhana said...

நன்றாகச் சொன்னீர்கள் Joe!
வாழ்த்துக்கள்!

அருண் said...

Hi Joe, That's the very reason why we make fun of them :) They don't care and we have enough reasons to make fun of them ;)